
தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் துயரத்தை போக்க 14 கடலோர மாவட்டங்களிலும் கடலோர மீனவ குடும்பங்களுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த தொகை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளி முழு நேரம் மீன் பிடி தொழிலில் ஈடுபடுவாராகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஓய்வூதியம் பெறாத மீனவர்களுக்கு ஐந்தாயிரம் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.