தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நீட் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அதிமுகவினர் புறக்கணித்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவினர் வருகிற 19 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுதி கூறி திமுகவினர் ஆட்சியைப் பிடித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் அதிமுக மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். மேலும் இந்த விடியா திமுக அரசினால் தங்களுடைய இன்னுயிரை இழந்த மாணவ மாணவிகளுக்கு கழக அணியின் சார்பில் வருகிற 19ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.