தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதாவது இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ஆகியவற்றையும் முன்னிட்டு 2 மாதங்களுக்கு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டமற்றும் வெளிமாநில வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு செப்டம்பர் 9-ம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.