நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் வங்கிகளில்  எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்னதான் டிஜிட்டல் மயமானாலும் வங்கிகளில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதாவது வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் செப்டம்பர் 14ஆம் தேதி விடுமுறை. அடுத்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை. மேலும் இதன் காரணமாக வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.