
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இரவு 7:00 மணி வரை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் வருகிற 8-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.