
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 28 பிற்பகல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதனை மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் தங்களது மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுக்கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.