
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 27-ம் தேவி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை ஏர்போர்ட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்பிறகு மதுரை நகர பகுதியில் 103 டிகிரியும், சேலத்தில் 103.64 டிகிரியும், வேலூரில் 103.46 டிகிரியும், ஈரோட்டில் 103.28 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரியும், தர்மபுரியில் 102.2 டிகிரியும், கரூரில் 102.2 டிகிரியும், திருச்சியில் 102.2°, திருத்தணியில் 100.4 டிகிரியும், கோவையில் 100.4 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும் இதனால் ஒரு சில இடங்களில் அசோகரிமான சூழல் உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.