வங்கக்கடலில் மத்திய கிழக்கு அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.