
தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி அரியலூர் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் நாகை வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் காலை 10 மணி வரை மலைத்தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூருக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பிற இடங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.