தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். எனவே குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் வெயிலின் போது வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மோர் மற்றும் இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.