
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது இன்று காலை மேற்கு மற்றும் வடமேற்கு நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.