இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகின்றது. அதே சமயம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பும் அடிக்கடி ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் என மொத்தம் 15 நாட்கள் விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படும் பண்டிகை நாட்களின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து மொத்தம் நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது