
தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட கடலோர பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 2.1 மீட்டர் முதல் 2.3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் கடலோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா செல்வோர் கடலில் இறங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.