
தமிழகத்தில் திரும்பிய திசை எல்லாம் கொலைகள் நடைபெற்று வருகின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுவது, குடும்ப வன்முறை, தகாத உறவு மற்றும் காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் தினம் தோறும் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ரவுடிகளை உளவு போலீசார் உதவியுடன் தேடி வருகிறார்கள்.
ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசாரும் ரவுடிகள் ஒலிப்பு போலீசாரும் தீவிர தேடுதலில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 8,860 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழு மோதல், அரசியல் காரணங்கள், முன்விரோதம் மற்றும் பழிவாங்கல் முயற்சியில் 244 ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.