தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்கும் விதமாக ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபெட்,குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்கொலைக்கான வாய்ப்பை தடுக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மேற்கண்ட பூச்சி மருந்துகளுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்ட தற்கொலைகள் குறைந்துள்ளதா என்பது கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறு வகையான பூச்சி மருந்துகளுக்கும் அரசு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.