தமிழகம் மற்றும் கேரளாவில் 700 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் உட்பட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி உள்ளது. கொரோனா காலத்தின் போது ஏராளமான வாகன நிறுத்தங்களின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் அதன் பிறகு படிப்படியாக ஒப்பந்ததாரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே வாகனம் நிறுத்தும் வசதி இருந்த நிலையங்களை தேர்வு செய்து புதிய ஒப்பந்ததாரரை நியமித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேசமயம் அரக்கோணம் திண்டிவனம் மதுராந்தகம் கலங்கரை விளக்கம் மண்டக கன்னி அம்மன் கோவில் மீனம்பாக்கம் கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையங்களில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த 7 ரயில் நிலையங்களிலும் மீண்டும் வாகனம் நிறுத்தும் வசதி கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.