தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தர்மபுரி, ராணிப்பேட்டை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.