தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென்றனர். அவர்கள் சிலைகளை கரைத்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென டிராக்டர் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி விஷால் (14), நிவாஸ் (14), கிஷோர் (14) ஆகிய சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.