
தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென சிறுமியை கடித்து குதறியது. அதோடு சிறுமியை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாய்கள் கடிப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் நேற்று சென்னையில் ஒரு சிறுவனை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் இதைத் தொடர்ந்து இன்று ஒரு சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.