
தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இ-பேருந்துகள், தாழ்தள பேருந்துகள் இயக்கத்துக்குக் கொண்டு வரப்படும் எனக் கூறிய அவர், இந்தாண்டு இறுதிக்குள் இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.