இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்நிலையில் பொதுவாக சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் என்பது முடிவடைந்து விட்டது. இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் தலைமையில் நாளை கிராம சபை கூட்டங்கள் காலை நடைபெற உள்ளது. மேலும் இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய நிறைகுறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.