தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் தொடங்குகின்றது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று முதல் ஜூலை 22ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. தலைமை திறன், பணிதிறன் மேம்பாடு மற்றும் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது