தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் 2-ம் கட்ட கையடக்க கணினிகள் வழங்கும் பணியை அரசு தொடங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கு லேப்லெட் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு TAB வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 79,723 ஆசிரியர்களுக்கு லேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக 55,478 பேருக்கு லேப்லெட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் லேப்லெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.