
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ஏற்கனவே உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன் புதியதாக கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.