
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது எமிஸ் தளத்தில் அரசு பள்ளிகள் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகத்தான் தற்போது பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அந்த வலைதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணிகளை வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.