
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 இன்று முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் மூலம் பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.