தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டி கிடந்த பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தும் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிதழ் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே இன்று மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.