தமிழகத்தில் இன்று(ஜூன் 19) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை: விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜுன் 19) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. விக்கிரமசிங்கபுரம், சேர்வலாறு, பாபநாசம், அடைய கருங்குளம் வட்டார பகுதியில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மதுரை: உறங்கான்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக இன்று (ஜுன் 19) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரை தொழிற்பேட்டை, உறங்கான்பட்டி, வரிச்சியூர், காளிமங்கலம், சக்குடி, விளாத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்திமங்கலம், கார் சேரி மற்றும் குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர்: மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (ஜுன் 19) நடக்கிறது. மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, பெரியகோட்டை, காடந்தகுடி, அத்திவெட்டி, இளங்காடு, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சேலம்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜுன் 19) மல்லூர் டவுன், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர், கீர்னூர் வலசு, நெ.3 கொமாரப்பாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதே போல், அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதாகல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருப்பூர்: உடுமலை அருகே பூளவாடி துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (ஜுன் 19) பூளவாடி, பொம்ம நாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர் பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துபட்டி, சிக்கனுத்து, முத்து சமுத்திரம், கொள்ளு பாளையம், ஆமந்தகடவு, லிங்கம் நாயக்கன்புதூர், சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜுன் 19) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், காவேரிப்பட்டணம் நகரம், தளி அள்ளி, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தேனி: தேவாரம் துணை மின் நிலையத்தில் இன்று (ஜுன் 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

நாமக்கல்: ராசிபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஜுன் 19) நடைபெறுகிறது.
குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், ஆண்டகளூர்கேட், கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், பட்டணம், காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் இன்று (ஜுன் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான் குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது..