
தமிழ்நாடு விழா ஜூலை 18 இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இன்று அரசு சார்பாக விழா நடைபெற உள்ளது. அப்போது தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு நாள் குறித்த முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினர் அறியும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.