பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மின் கட்டணங்களால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் பலரும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.