தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை யான இன்று பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்த நிலையில் ஆடி 18 என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையும், வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு நாமக்கல், கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.