
தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாகவே விஜயதசமியில் பள்ளிகள் அனைத்தையும் திறக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதாவது இன்று விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன் காரணமாகத்தான் இன்று அனைத்து பள்ளிகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சில தனியார் பள்ளிகளிலும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அட்மிஷன் நடைபெறும். மேலும் முன்னதாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டுமே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் தற்போது அதனை விரிவுபடுத்தும் நோக்கில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அருமையான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.