
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் வாசிப்பு பயிற்சி ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எமிஸ் வலைதளத்தின் மூலம் காணொளி வாயிலாக இன்று முதல் பயிற்சி வழங்கப்படும்.
அந்த பயிற்சியின்போது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பயிற்சியை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது. அதோடு வாசிப்பு பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.