தமிழக அரசு சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு இன்றும், நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. தட்கள் முன்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது.