
தமிழகத்தில் கடைகளின் ஒவ்வொரு பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு தலைவர் விக்ரம ராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், அரசு விரைவில் பல்வேறு சட்டங்களை கையில் எடுக்க உள்ளது.
அதற்கு முன்னதாகவே இந்த பணியை தமிழ்நாடு முழுவதும் வணிகர் பெயர் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. முதல் வரி தமிழில் இருக்க வேண்டும். அதன் பிறகு ஆங்கிலத்தில் அல்லது வேறு மொழியில் வைத்துக் கொள்ளலாம். இதனை மீறும் வியாபாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.