தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.