
தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல் விவசாயிகள் நலனை கருதி நடைபாண்டில் செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2450, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2405 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசு வழங்கும் 15 ரூபாய் ஊக்க தொகையும் அடங்கும். விவசாயிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களுடைய நெல்லை அரசு சார்பாக நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.