
தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணை மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்ற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25 முதல் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.