
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நேற்று காஞ்சிபுரத்தில் திமுக கட்சியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை மற்றும் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையையும் கண்காணித்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்று வேறு 7 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியானது. அதோடு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தங்கம் தென்னரசு மற்றும் கா. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் புதிதாக கோவி. செழியன், நாசர், ஆர். ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அதோடு செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
இவர்கள் அனைவருக்கும் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. மேலும் 6 அமைச்சர்களின் துறையையும் மாற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு அமைச்சர்களின் அதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனித வள மேம்பாட்டு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.