தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நாளை முதல் 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெறுவதாக தற்போது கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு கலைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பள்ளிகள் அளவில் நடத்தப்படும் நிலையில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும்.

இதில் தேர்ச்சியானவர்கள் வட்டாரம், மாவட்டம் ‌ மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைத் திருவிழாவின் போது பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, பரதம் மற்றும் நடனம் உள்ளிட்ட பலவிதமான போட்டிகள் நடத்தப்படும். மேலும் மாணவர்களிடையே கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.