
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு திறமை இல்லை என்று தொழில் நிறுவனங்கள் கூறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பேசிய ஆளுநர், நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இன்றி இருக்கின்றனர். வேலைவாய்ப்புகளை பெற மாணவர்களுக்கு கல்வியை விட தனித்திறமையை தேவை.
தமிழ்நாட்டு மாணவர்களிடம் வேலைவாய்ப்புக்கான போதிய திறன்கள் இல்லை என்று பல நிறுவனங்கள் கூறுகின்றன. 80 முதல் 90 சதவீதம் பேரு வேலை வாங்க முடியாத நிலையில் உள்ளனர் என்று ஆளுநர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.