தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விற்பனையாளர்களும் 30 லட்சத்திற்கும் மேலான விற்பனை ஆவணங்கள், சொத்தின் தன்மை மற்றும் மதிப்பு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் ஆவணத்தாரர்கள் இடமிருந்து முன்பதிவு செய்வதற்கான தகவலை பெறும் விதமாக பதிவு துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் தற்போது செயல்பட்டு வருகிறது.

இது ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமானவரித்துறைக்கு நேரடியாக அனுப்புகின்றது. அதேசமயம் 1975 ஆம் ஆண்டு முதல் உள்ள வில்லங்கச் சான்றுகளை பொதுமக்கள் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது ஸ்டார்ட் 2.0 மென்பொருள் திட்டத்தில் ஒரு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1950 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான வில்லங்கச் சான்றுகளை பொதுமக்கள் இணையதளம் மூலமாக எந்த த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.