
தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7 முதல் ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 10ஆம் தேதி இன்று காலை ஆழ்வார் பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம். அதனைப் போலவே ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.