
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்காக இந்த நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த உரிமை தொகையை பெறுவதற்கும் அல்லது ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டில் பெயர் சேர்த்து புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கும் பலரும் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகின்றது. எனவே மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் வரை புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.