தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்படி மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். அதன்படி மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் என்பது தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது.

சில இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயிலில் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் நிலையில் 100% வரை வெப்பநிலை சென்னை உட்பட பல மாவட்டங்களில் பதிவாகிறது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் விரைவில் ஆரம்பிக்க இருப்பதால் இன்னும் வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்கவே செய்யும். மேலும் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வருவதால் மக்கள் அதிலிருந்து தப்பிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடும் மதிய நேரத்தில் அநாவசியமாக வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.