தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழைக்காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக சார்பில் Rapid Response Team உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அமைப்பு தன்னார்வலர்கள் மூலம் செயல்படும் நிலையில் மழை நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தொடர்பு கொண்ட புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்கு அதிமுக உதவும் என்று கூறியுள்ளார்.

அதோடு கடந்த வருடமே திமுக ஆட்சியில் பருவமழையின் போது நேர்ந்த அவலங்களை பார்த்ததாகவும் அதனால்தான் தற்போது மக்களுக்கு உதவுவதற்காக புதிய அமைப்பினை தொடங்கியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெற்றுக்கொள்ள அதிமுக தன்னார்வலர்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் எந்த நேரத்திலும் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பர்கள் கீழ்கண்ட எக்ஸ் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி விவரமாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,