பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் பெயரில் நடக்கும் மோசடி குறித்து பொதுமக்களை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகிறது. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மோசடி அதிகரித்து வருகின்றன.

அந்தர்வாகியி பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி லாபகரமான பரிசுகள் என்ற வாக்குறுதியுடன் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும், இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டிருந்தால், சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930-ஐ டயல் செய்யவும்