
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைப் போலவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் என்னென்ன பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தற்போது ரேஷன் கடைகள் மூலமாக புதிதாக மற்றொரு பொருள் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் தேயிலை தூள் விற்பனை செய்ய உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு ஓரிரு மாதங்களில் ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.