
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கைரேகை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக கண் கருவிழி ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று தற்போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஏற்கனவே பலருக்கு தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் தகுதியானவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அதன் பிறகு தமிழகத்தில் தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் கண் கருவிழி ஸ்கேன் செய்வதன் மூலம் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான தொழில் நுட்பம் தயாராகி வருகிறது என்று கூறினார்.