
திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, முயற்சியை மூச்சாகக் கொண்டு, அறிவைப் பாலமாகக் கொண்டு, ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு, அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி தமிழ் பூமியை காத்து வரும் சாமி எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே… நாடு முன்னேற நலங்கள் பெற வேண்டும் என்றால் ? விதி ஒன்று செய்வோம்.
ஜனநாயகத்தை சற்று தூக்கி நிறுத்தி சட்டத்தின் சவுக்கை எத்திக்கும் எடுப்போம் என்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை திறம்பட கையாண்டு, இந்தியாவின் ஒப்புயர்வற்ற ஒரே மாநிலமாக தமிழகத்தை ஆக்கிய பெருமை அண்ணன் எடப்பாடியார் அரசை சாரும். அண்ணனின் ஆட்சிக் காலத்தில் துரைதோறும் துரித நடவடிக்கைகளால்… தமிழகம் அமைதி, வளம், வளர்ச்சி என்கின்ற இலக்கை நோக்கி பயணப்படுவதை நன்கு அறிய முடிந்தது.
நன்றி மறவா தன்மை மட்டும் தமிழனிடமிருந்து விட்டால் அடுத்து வருவதும் அம்மா ஆட்சிதான். உப்பிட்டவரை உள்ளளவு நினை என்பது பழமொழி. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யக்கூடாது என்பது பழமொழி. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞானத்தின் மானம் பெரிது என்பது குறள். வள்ளுவரின் குரலுக்கு மதிப்பு தந்து, தமிழனின் சொற்களுக்கு உணர்வு தந்து, உப்பிட்ட இயக்கத்தை நட்போடு காத்தால் மே 2026ல் ஆஇஅதிமுகவின் ஆண்டாக மலரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.